செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்க கெடு!

0
0

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

மக்கள் நலத்திட்டங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  விமானப்பயணம், வங்கி கணக்கு துவக்கம், பணப்பரிமாற்றம், வருமானவரி தாக்கல் ஆகியவற்றுக்கும் ஆதார் எண் தேவை.

இந்நிலையில் சிம்கார்டுகள்  ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.

போலி சிம்கார்டு புழக்கம் தவிர்க்கவும், தீவிரவாதிகள் சிம்கார்டு பயன்படுத்தாமல் இருக்கவும் இந்நடவடிக்கை என்று கூறப்பட்டது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு எண்கள் வைத்திருப்பவர்கள் ஆதார் எண்களை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இல்லாவிடில் 2018, பிப்ரவரி 6ஆம் தேதிக்குப் பிறகு செல்பேசி இணைப்பு துண்டிக்கப்படும்

ஒருவர் 9 சிம்கார்டு வரை வைத்துக்கொள்ளலாம். யார் பெயரில் வேண்டுமென்றாலும் வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது, ஒருவர் 5 சிம்கார்டு வரை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here