நேற்று ராஜினாமா, இன்று உண்ணாவிரதம்..! ஆசிரியை சபரிமாலா அதிரடி..!

0
0

விழுப்புரம் ஆசிரியை அரசு பணியில் இருந்து கொண்டு போராட்டம் நடத்த முடியாது என்பதால் தனது பணியை நேற்று ராஜினாமா செய்தார்.

அவர் நீட்டை எதிர்த்து இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
அனிதாவின் மரணம் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும், நாடுமுழுவதும் ஒரே கல்விமுறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தனியாக போராட்டம் செய்தார்.

இதை அடுத்து சமூகம்தான் முக்கியம். பதவி முக்கியம் இல்லை என்று கூறி தனது பணியை நேற்று ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் ஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை எதிர்த்தும், நாடு முழுவதும் ஒரேகல்வி முறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் செக்காம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

இவருடைய இந்த போரட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியைக்கு தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவது தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here