பாகிஸ்தான் டேங்கர் லாரி விபத்தில் 123 பேர் பலி – விடியோ

0
0

பாகிஸ்தானில் டேங்கர் லாரி தீ பிடித்து எரிந்தது இவ்விபத்தில் 123பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹவல்பூர் நகரில்  எண்ணெய் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது.

இதனால் லாரி சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்தது.

லாரியிலிருந்த எண்ணெய் லீக் ஆனது.

இதனால் அப்பகுதி மக்கள் எண்ணெயை எடுக்க திரண்டு வந்தனர்.

அவர்கள் வாளி, குடம் போன்றவற்றை வைத்திருந்தனர்.

பலர் லாரிக்கு அருகில்நின்று போன் செய்து தங்கள் உறவினர், நண்பர்களையும் எண்ணை லீக் குறித்த விபரத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் டேங்கர் லாரி திடீரென்று தீப்பிடித்தது.

அதில் 123பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனைகள் இல்லை.

எனவே, 60கி.மீ. தூரத்தில் உள்ள நகர மருத்துவமனைகளுக்கு காயமடைந்தோர் எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 40பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தீப்பிடித்த டேங்கர் லாரியின் அருகே நின்றுகொண்டிருந்த 5கார், 13டூவிலர்கள் தீக்கிரையாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here