பிரதமருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

0
1

பிரதமர் நரேந்திரமோடியை தமிழக அமைச்சர்கள், தம்பிதுரை இன்று சந்தித்தனர்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.


அமைச்சர்கள் சண்முகம், அன்பழகன், தங்கமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார் பிரதமரை சந்தித்தனர்.
அவர்களுடன் துணை சபாநாயகர் தம்பிதுரையும் பிரதமரை சந்தித்தார்.


முன்னதாக மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினர்.
நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கைவிட வலியுறுத்தி இம்மாதம் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here