அரசு, ஆளுநர் மீது தினகரன் அட்டாக்!

0
1
சென்னை: ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டசபைக்கு சென்றார் டிடிவி தினகரன்.
அவருக்கு 148வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.  அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அவைக்கு வெளியே தடுக்கப்பட்டனர்.
பேரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டியளித்தார். அவர்
கூறியதாவது:
பேரவையில் நான் எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ளேன். எதிர்க்கட்சி என்பதால் திமுக வெளிநடப்பு செய்யும்போது நானும் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதேநேரம்  திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்.
 ஆளுநர் உரையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரு சக்கரவாகன மானிய திட்டத்தையே அமலாக்காமல் உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. ஓகி புயலில் காணாமல்போன  மீனவர்களை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதைத்தான் முதலில் கேட்டிருக்க வேண்டும் .
111 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்றும் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு எழுதி கொடுத்ததை ஆளுநர் படிக்கிறார்.
இந்த அரசே செயல்படவில்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது.  ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கே அந்த பயம் உள்ளது. அதற்காகத்தான் மேஜையைத் தட்டி தங்களின் பயத்தை போக்கிக் கொளகின்றனர். இந்த ஆட்சி விரைவில் கவிழும்
தமிழ்நாட்டில் நடப்பது கோமாளிகளின் ஆட்சி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியும். இவர்களை நம்பி, அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள்.
மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பவர்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள்.
இவ்வாறு தினகரன் பேட்டியின்போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here