தமிழ் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பெங்களூரில் பரபரப்பு..!

0
0

பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் உள்ள புலகேஷி நகர் பகுதியில், அப்பகுதியில் வசித்து வரும் தமிழர்கள் தமிழில் பேனர்கள் வைத்திருந்தனர்.

அந்த பேனர்களை இன்று காலை கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா ‘கர்நாடகாவில் கன்னட மொழிதான் முதன்மையானது. கர்நாடகாவில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்துக்கொள்ள முடியாது’ என்று கன்னட மொழி குறித்துப் பேசி இருந்தார்.

இந்நிலையில் பெங்களூரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் தமிழ் பேனர்களை கிழித்ததன் நோக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

Related Topics : National News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here