அமெரிக்க அமைச்சரை எதிர்த்து ராக்கெட் தாக்குதல்

0
3

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மாட்டிஸ் இன்று ஆப்கானிஸ்தான் வருகைதந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காபூல் நகரின் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் பாதுகாப்பு அமைச்சர் போர்க்களம் ஒன்றுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கனி,   நேட்டோ படை தலைவர் ஸ்டோலன்ஸ்பர்க் ஆகியோருடன் அமெரிக்க அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பினர் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இருந்தபோதும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அவர்கள் பதுங்கியுள்ளனர்.

ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்பினருடன் அவர்கள் தொடர்பில் உள்ளனர்.

அந்த அமைப்பினரிடம் ஆயுதப்பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர்  ஆப்கானிஸ்தானில் மேலும் இரு ஆண்டுகள் நீடிப்பதுஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கன் ராணுவத்தினருக்கு போர்ப்பயிற்சிகளும் கூட்டுப்படை சார்பில் அளிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஜிம் மாட்டிஸ் காபூல் வந்துள்ளார்.

அவர் வந்த ஒரு சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சரசரவென ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.

வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.

இச்சம்பவத்தில் 5வீரர்கள் உள்ளிட்ட 24பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்துக்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் சபியுல்லா என்பவர் டுவிட் செய்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here