ஆப்பிள் சாப்பிட்டால் ஆபத்தா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்பது பிரபலமான ஒரு பழமொழி.

அத்தகைய பெருமைமிக்க ஆப்பிள் பழத்தில் ஆபத்து உள்ளது என்று விஞ்ஞானிகள்      தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றில் சயனைடு விஷம் உள்ளதென்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்த விதைகளில் அமிக்டாலின் உள்ளது. இது மனிதனின் உடலில் செரிக்கப்படும்போது சர்க்கரை மற்றும் விஷத்தன்மை உடைய சயனைடு வெளியாகிறது.
இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளைக்கு தடை ஏற்படுகிறது.


விதைகளை சுமார் 200கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை கண்டிப்பாக அகற்றிவிடவேண்டும்.


இந்த சயனைடு பேரிக்காய், செர்ரி, பிளம்ஸ் ஆகியவற்றின் விதைகளிலும் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION