தினகரன் எம்.எல்.ஏ.,க்கள் தங்க, ஸ்டாலின் ஏற்பாடு..??

0
0

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் வைப்பதற்கும்,அவர்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்ததற்கும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து தூக்குவது மட்டுமே. ஆனால், இந்த அத்தனை வேலைக்கும் தி.மு.க., துணை தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முக்கிய காரணமாம்.

சசிகலாவின் கணவர் நடராசன், ஸ்டாலினை தொடர்பு கொண்டு எடப்பாடி அரசுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும். முடிந்தால் அந்த அரசு கலைக்கப்பட வேண்டும். அதற்கு தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் சப்போர்ட் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் இப்போதைக்கு நாம் நேரடியாக கைகோர்க்க வேண்டாம். சமயம் வரும்போது இணைந்து செயல்படுவோம் என்று கூறியதாகவும் செய்திகள் பரவுகின்றன.

ஸ்டாலினுக்கு,எப்படியும் எடப்படியை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்பதே எண்ணம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உதவியுடன் காய் நகர்த்தி கவர்னரிடம் கடிதம் கொடுக்க வைத்ததும், பின்னர் புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களை பத்திரமாக தங்க ஏற்பாடு செய்ததும் ஸ்டாலின் தானாம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை தொடர்பு கொண்ட ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்கு சொகுசு விடுதியை தயார் செய்தாராம். நாராயணசாமியின் ஏற்பாட்டில் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான வின்ட் பிளவர் விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி இருந்தனர்.

இதை அறிந்த கிரண் பேடி அந்த விடுதியில் சோதனை போட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். போலீசாரும் அங்கு சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பின்னரே எம்.எல்.ஏ.,க்களை வேறு விடுதி மாற்றினார்களாம்.

ஸ்டாலின் உதவியால்தான் இதெல்லாம் நடக்குது என்று தினகரன் அணியினர் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களாம்.

ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதும், நடக்கின்ற இந்த சம்பவங்களும் நம்மை கொஞ்சம் சந்தேகப்படவே வைக்கிறது.

ஆனாலும், ஸ்டாலின் ஆட்சியை குறுக்கு வழியில் பிடிப்பதற்கான சூழலும் இல்லை. ஏனெனில், தேர்தல் வந்தால் தி.மு.க., ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here