தோனி ஸ்டம்பிங்…ஷிகர்தவான் சதம்! ஒருநாள் தொடர் இந்தியா வசம்!!

0
0

விசாகப்பட்டணம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி ஸ்டம்ப் அவுட் செய்ய, ஷிகர்தவான் சதமடிக்க, இந்திய அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது இந்தியா.
இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் தொடர் விசாகப்பட்டிணத்தில் இன்று நடந்தது.


டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பவுலிங்கை தேர்வுசெய்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்குப்பதில் குல்தீப் யாதவ் பங்கேற்றார்.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் குணதிலகா 13ரன்னுக்கு அவுட்டானார். தரங்கா அதிரடி காட்டி 9வது ஓவரில் அரைசதம் எட்டினார். இலங்கை அணி 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல்- அவுட்டானது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (100), தினேஷ் கார்த்திக் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தனஞ்செயா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தரங்காவின் அதிரடியால் இலங்கை அணி 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குல்தீப் யாதவ் வீசிய 28வது ஓவரின் முதல் பந்தில் தரங்கா இறங்கி அடிக்க முற்பட தோனி உடனடியாக ஸ்டம்பிங் செய்தார். இதனால் இலங்கை அணியின் ரன் பாய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here