இலங்கையிலும் பணம் வாபஸ் திட்டம்!

0
0

இந்தியாவில் ரூ.1000, ரூ.500நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு புதிய நோட்டுகள் அளித்ததைப் போன்று இலங்கையிலும் டிமானிடைஷேசன் திட்டம் கொண்டுவர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஆனால் கள்ளநோட்டு பிரச்சனை சவாலாக உள்ளது.

கரன்சிகளை அச்சடிக்க சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அச்சுத் தொழில்நுட்பம் இலங்கையில் இன்னமும் அறிமுகமாகவில்லை. எனவே, கள்ளநோட்டுப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள அதிக மதிப்புள்ள நாணயத்தை திரும்பப்பெற வேண்டுமென்ற யோசனை எழுந்துள்ளது.

இலங்கையில் ரூ.5000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை திரும்பப்பெற்று புதிய தாள்கள் தர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை மத்திய வங்கி நாடாளுமன்ற ஒப்புதலுக்கு இதுதொடர்பான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவில் பணம் வாபஸ் திட்டம் எதிர்மறை பலனை தந்துள்ள நிலையில் இதனை அறிமுகப்படுத்துவது குறித்து இலங்கை அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here