வெற்றிப்பயணம் துவக்கியது தெற்காசிய செயற்கைக்கோள்

0
0

தெற்காசிய நாடுகள் உபயோகத்துக்காக சிறப்பு செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் எல்லோரும் ஒன்றிணைவோம், எல்லோரும் உயர்வோம் என்பதை தாரக மந்திரமாக முழங்கினார்.

அதனடிப்படையில், தெற்காசிய நாடுகள் ஒன்றாக வளர்ச்சியடைய செயற்கைக்கோள் விடப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, ரூ.253 கோடி செலவில் இரண்டரை வருடங்களில் ஜிசாட்9 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.
அதில் 12க்யூ பேண்ட் அலைவரிசைகளை இயக்கும் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.

இச்செயற்கைக்கோள் இன்று மாலை 4.57மணிக்கு சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
5.34 மணிக்கு ராக்கெட்டில் இருந்து பிரிந்து நிர்ணயித்த பாதையில் பயணம் துவக்கியது ஜிசாட்9.

ஜிஎஸ்எல்வி எப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மாலத்தீவு அப்கானிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.

தெற்காசிய செயற்கைக்கோள் உதவியுடன், இயற்கை பேரிடர் கண்கானிப்பு, தொலை தொடர்பு, தகவல் தொடர்பு ஆகியவை மேம்படுத்தப்படும்.
பிரதமர் நரேந்திரமோடி இஸ்ரோ அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இச்செயற்கைக்கோள் தகவல்கள் சார்க் நாடுகளிடையே பகிரப்படும்.

அமைதி, வளர்ச்சி, மனிதநேயம் இந்நாடுகளிடையே மேலும் மேம்படும் என்று வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கன் அதிபர் அஸ்ரப்கனி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் தங்கள் நாட்டின் ஊரக பகுதிகள் பயனடையும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here