தொடர் தோல்வி ஏன்? காரணங்களை அடுக்கும் கேப்டன்!!

0
1

தென்னாப்ரிக்கா: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
செஞ்சூரியனில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனால், தென் ஆப்பிரிக்க அணியிடம் சரண் அடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது.

தொடர்தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி செய்தியாளர்களிடம் கூருகையில்,
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடவில்லை. எனவே, தோல்வி கிடைத்தது.
கடுமையாக முயற்சித்த போதிலும், போதிய அளவு சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக பீல்டிங்கில் சொதப்பி விட்டோம். இதனாலேயே தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டது.

நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிப்பதில் தவறிவிட்டோம்.
டாஸ் போடுவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது ஆடுகளம் மாறியுள்ளதாக சக வீரர்களிடம் நான் தெரிவித்தேன். மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து, முன்னிலை பெற நாங்கள் தவறிவிட்டோம்.
போட்டியில் தோல்வி அடையும் போது 150 ரன்கள் என்பது என்னைப்பொறுத்தவரை ஒன்றுமேயில்லை.
இவ்வாறு கோலி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here