இந்தியாவை கட்டுப்படுத்தியது தெ.ஆப்ரிக்கா! 72ரன் வித்தியாசத்தில் வெற்றி!!

0
2

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
முதலாவது டெஸ்ட்போட்டியின் 4வதுநாள் ஆட்டம் இன்று தொடங்கியது.


தென் ஆப்பிரிக்கா 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். இந்தியா 208 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயம் செய்தது.


இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆட்டம் சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமையவில்லை. தென் ஆப்பிரிக்க வீரர்களும் பந்துவீச்சில் அசத்தி இந்திய விக்கெட்களையை வரிசையாக எடுத்தனர். இதனால் இன்றுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

விராட் கோலி 28 ரன்களில் அவுட் ஆனார், அவரது விக்கெட் உள்பட 6 விக்கெட்களை 42 ரன்களை மட்டும் கொடுத்து எடுத்தார் பிலாண்டர். அஸ்வின் 37 ரன்களை அடித்து இருந்தார். இந்திய அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here