எம்.ஜி.ஆர். ரசிகர் பன்னீர்செல்வத்தை தாக்குவாரா?

0
1

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கொல்ல முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக அம்மா அணி அமைத்து செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அங்கு அவரை பார்ப்பதற்கு வந்த ஒருவர் தடுக்கப்பட்டார்.

அவரிடம் கத்தி இருந்துள்ளது.

அவர் பன்னீர்செல்வத்தை கொல்ல முயன்றதாக தகவல் பரவி அந்நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் திருச்சி டோல்கேட் பகுதியை சேர்ந்த சோலை ராஜன்(56).

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளார்.

எம்ஜிஆர் கூறியதைத்தொடர்ந்து தன்னிடம் கத்தி வைத்துக்கொண்டுள்ளார்.

தற்போது பன்னீர்செல்வம் அணியில் இருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பன்னீர்செல்வம் கூறுகையில்,

எனக்கு பாதுகாப்பு பலப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

மர்மநபரை, என்னுடன் வந்த பாதுகாப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியபோதுதான்  கத்தி இருந்தது தெரியவந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here