ராகுல்காந்தி பேச்சுக்கு ஸ்மிருதி இராணி கண்டனம்…!

காங்கிரஸ் துனைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.


கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: வெறுப்பு,கோபம் மற்றும் வன்முறை நம்மை அழித்துவிடும்.
வன்முறையைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் நான் எனது தந்தை மற்றும் பாட்டியை வன்முறையில் இழந்தவன்.


மாணவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நான் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளராக நிற்க தயார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சிதான் முடிவெடுக்கவேண்டும் என்றார்.
மேலும், பா.ஜ.க.வினர் சமூக ஊடகங்கள் வாயிலாக என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர், நாட்டை வழிநடத்துபவர் தான் இவர்களையும் வழிநடத்துகிறார் என்று கூறினார்.
பா.ஜ.க. அரசின் ரூபாய் நோட்டு திரும்ப பெற்ற விவகாரத்தை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.


ராகுல்காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார்.
தோல்வி அடைந்த வாரிசு ராகுல் என்றும் அவர் தனது தோல்வியடைந்த அரசியல் வாழ்க்கை பற்றி வெளிநாட்டில் பேசி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

https://www.pscp.tv/ANI_news/1eaKbmvPXdexX?autoplay&t=61

பிரதமர் மோடியின் மதிப்பை குறைக்கவே அவர் இவ்வாறு பேசி உள்ளார். என்று ஸ்மிருதி பதிலடி கொடுத்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION