பணம் திருடும் வைரஸ்…! உஷார்..!உஷார்!!

செல்போன் வாயிலாக ஷாப்பிங் செய்வோரை குறிவைத்து புதிய வைரஸ் பரவி வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்தால் பலர் தங்கள் செல்போன் வாலட்களில் பணத்தை இழந்து வருகின்றனர்.
வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து வெளிநாடுகளில் தயாராகும் ஆடம்பர பொருள்வரை ஸ்மார்ட்போன் வழியாக வாங்கும் வசதி வந்துவிட்டது.

 

 

இதற்காக ஷாப்பிங் ஆப்கள் தினந்தோறும் அறிமுகமாகி வருகின்றன.

இவற்றை ஷேப்காபி ட்ரோஜன் என்ற வைரஸ் தாக்கி வருகிறது.

ஷாப்பிங் ஆப்-களை டவுன்லோடு செய்யும்போது அவற்றுடனேயே இந்த வைரஸ் செல்போனுக்குள் நுழைகிறது.


செல்போனில் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தும் வாலட்டில் உள்ள விபரங்கள் இந்த வைரஸ்களால் வெளியே தெரியவரும்.
இதனால் மொபைல் வாலட்களில் உள்ள பணம் திருடப்பட்டுவிடும்.

 

ஷேப்காபி ட்ரோஜன் வைரஸ்கள் நவீன கேப்சா தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுபவை.
எனவே, இந்தவைரஸ் செல்போனில் ஊடுருவியுள்ளதை கண்டுபிடிப்பது கடினம்.
இந்தியாவில் இந்தவைரசின் தாக்கம் 40% உள்ளதாக தெரியவந்துள்ளது.


எந்த ஒரு ஆப் டவுன்லோடு செய்யுமுன் அவற்றை முறையாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் உஷார் படுத்துகின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION