பாஜக-வில் சின்ஹா புரட்சி!

0
0

தெலங்கானா: மத்திய அரசை ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களே விமர்சித்துவருகின்றனர்.
அக்கட்சியில் சின்ஹா புரட்சி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணம்வாபஸ் திட்டம், ஜிஎஸ்டி தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சத்ருகன் சின்ஹாவும், மக்களுடைய எதிர்பார்ப்புக்கு இணங்க பாஜக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அது ‘ஒன் மேன் ஷோ, டூ மேன் ஆர்மி’ ஆதிக்கத்தை கைவிட வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.


இந்நிலையில், தெலுங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறுகையில்,
கட்சியின் ஒழுங்கு விதிகளை இருவரும் நீண்ட நாட்களுக்கு முன்பே கடந்து விட்டனர்.
பணமதிப்பு நீக்கம் குறித்து கடும் விமர்சனங்களை வைத்த யஷ்வந்த் சின்ஹா, ஜிஎஸ்டி வரி மீதும் கடும் விமர்சனங்கள் வைத்தார். மக்கள் பட்ட கஷ்டங்களுக்காக அவரை பதவி விலகுமாறு மக்கள் கோருவதில் தவறில்லை என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி குஜராத் மக்களின் சுமை என்றும் யஷ்வந்த் சின்ஹா வர்ணித்தார்,

பாஜக தேர்தலைச் சந்திக்கும் போதெல்லாம் இந்த யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா இருவரும் விமர்சனத்தில் இறங்குகின்றனர். பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய தேர்தல்களின் போது பார்த்தோம் தற்போது இமாச்சலம், குஜராத் தேர்தல்களில் பார்க்கிறோம். எனவே இருவரையும் வேறு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்று பாஜக கருதுகிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here