சிங்கப்பூர் குழந்தைகளுக்கு பள்ளி என்றாலே பதட்டம்!

0
0

சிங்கப்பூர் மாணவிகள் பள்ளி, பரீட்சை, ரேங்க் ஆகியவை குறித்து அதிகமான பதட்டத்துடன் உள்ளனர்.

உலக அளவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.

பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாடு அமைப்பு சார்பில் 72நாடுகளை சேர்ந்த மாணவர்களிடம் சர்வே நடைபெற்றது.
அதில் கணக்கு, அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துவோர் சிங்கப்பூர் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அதேநேரம் பதட்டம் அதிகமான மாணவ மாணவிகளாகவும் அவர்களே உள்ளனர்.
தேர்வு, ரேங்க் ஆகியவை குறித்து இக்குழந்தைகள் அதிகம் பதட்டத்தை அடைகின்றனர்.
இந்த பதட்டம் தேர்வுக்கு தயாராகும்போதே வந்துவிடுவதாக பெரும்பான்மையான குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் அதிகபட்சமாக 76சதவீத பள்ளிக்குழந்தைகள் சிங்கப்பூரில் பதட்டம் அடைந்து வருவது தெரியவந்துள்ளது.
இதேபோன்று நல்ல ரேங்க் வாங்கவேண்டுமே என்ற பதட்டம் 86சதவீத குழந்தைகளிடம் காணப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள கல்வித்திட்டம் இப்பதட்டம் ஏற்பட முக்கியகாரணமாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கல்வித்திட்டத்தில் பல நிலைகள் உள்ளன. அவற்றை கடப்பதற்கு நுழைவுத்தேர்வு உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையை மாற்றி துவக்கப்பள்ளி திட்டத்தில் இருந்து மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
துவக்கப்பள்ளி தேர்வில் மதிப்பெண் முறையும், அடுத்தடுத்த நிலைகளில் திறன் பரிசோதிக்கும் வகையிலும் தேர்வுகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here