சிம்பு, விஜய்சேதுபதி, மணிரத்னம் கூட்டணி! மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம்!

0
0

மணிரத்னத்தின் புதிய படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அக்னி நட்சத்திரத்தைப்போன்று இளைஞர்களுக்கான ஒரு சப்ஜெக்ட் படம் தரவுள்ளார் மணி ரத்னம்.

காற்றுவெளியிடை படத்தின் போதே இதற்கான டிஸ்கஷன் நடந்துள்ளது.

இப்படத்தில் 4 கதாநாயகர்கள் என்றும் பேசப்பட்டது.  நடிகை ஜோதிகா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் கேமரா.

விக்ரம்வேதா படத்தை சமீபத்தில் பார்த்துள்ள இயக்குநர் வேதாவின் நடிப்பை சிலாகித்துள்ளார்.

தனது அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஒரு லீட் ரோல் தரவேண்டும் என்று அப்போதே திட்டமிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுகள் இந்தாண்டு இறுதிவரை உள்ளன. எனவே, விஜய்சேதுபதி ப்ரீயானதும் முழுவீச்சில் படபிடிப்பு தொடங்கப்படும்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று சிம்பு நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்துவந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று அவருக்கும் வாய்ப்பளித்துள்ளார் மணிரத்னம்.

சிம்புவின் சமீபத்திய படங்கள் சரிவர போகாத நிலையில் சிம்புவின் திரைவாழ்க்கையின் திருப்புமுனை படமாக இது இருக்குமென்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here