பெண் போலீசுக்கு பளார்! எம்.எல்.ஏ. அடாவடி!!

0
2
சிம்லா: பெண் போலீசை கன்னத்தில் எம்.எல்.ஏ. அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் சிம்லா நகரில் நடந்தது. காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி இக்கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் தொடங்கிய போது, திடீரென உள்ளே நுழைய முயன்ற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை அங்கிருந்த பெண் கான்ஸ்டபிள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ கான்ஸ்டபிள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
கோபமடைந்த கான்ஸ்டபிள் பதிலுக்கு அவரது கன்னத்தில் அறைந்தார். இதனையடுத்து, இருவரும் மாறி மாறி இரண்டு முறை அறைந்தனர்.
https://twitter.com/ANI/status/946647996619374592
அருகிலிருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆஷா அளித்த பேட்டியில் வருத்தம் தெரிவித்தார். தனது மகளின் வயதுள்ள பெண் போலீஸ் நடந்துகொண்ட முறை ஆத்திரம் ஏற்படுத்தியதால் அத்தவறை செய்ய நேர்ந்துவிட்டது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here