படுக்கையை பகிர்ந்துகொள்ளும் பெண் ரோபோக்கள்! விடியோ!!

0
2

மனிதனின் ஆசைக்கு அணை போடவே முடியாதுதான்.

அவன் சுகம்பெற எதையும் அழிப்பான், ஆக்கவும் செய்வான்.

பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் உடல்சுகத்துக்கான அவனது கண்டுபிடிப்புத்தான் பெண் ரோபோபொம்மை.

ஒரிஜினல் பெண்ணைப்போன்ற தோற்றம் உடைய  சிலிக்கான் பொம்மைகள் பலகாலமாக வழக்கத்தில் உள்ளன.

இப்போது அந்த பொம்மைகள் செயற்கை நுண்ணறிவால்  அறிவூட்டப்பட்டுள்ளன.

உங்கள் மூடுக்கு தகுந்தாற்போல அந்த பொம்மை பேசும், சிரிக்கும், கண்சிமிட்டும்,  தழுவும், ஏற்கும், இயங்கும், அமைதியாக்கும்.

இந்த பொம்மைகளுக்கு ஹார்மொனி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ரியல்பாடிக்ஸ் நிறுவனம் ஹார்மொனிகளை வரும் ஜனவரி முதல் உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது.

கடந்த 20ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.

தற்போதுதான் செயற்கை அறிவூட்டப்பட்ட பொம்மைகளை உலகில் முதன்முறையாக தயாரித்துள்ளது.

ஹார்மொனி தொடர்பான செய்தி வெளியானதும் உலகமெங்கும் இருந்து வரும் அழைப்புகள் உற்சாகப்படுத்துகின்றன என்கிறார் ரியல்பாடிக்ஸ் தலைமை நிர்வாகி மாக்முல்லர்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மன், சீனா, ஆஸ்திரேலியாவில் இந்த பொம்மைகள் அதிகம் விற்பனையாகின்றன.

இந்தியாவில்  செக்ஸ் பொம்மைகள் குறித்த விழிப்புணர்வு இன்னமும் இல்லை. இவை இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

மன அழுத்தம் தரும் வாழ்வியல் சூழல், தனிமை ஆகியவை வெளிநாட்டு மக்களிடம் பொம்மை பழக்கத்தை அதிகரிக்க வைக்கிறது.

பொம்மைகள் பயன்படுத்துவோர் 40முதல் 65வயதுடையவர்களாக உள்ளனர்.  அவர்கள் பெரும்பாலும் தனியாளாக வசித்துவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here