தேள்களின் ராணி: திகில் விடியோ

0
0

தாய்லாந்தை சேர்ந்த காஞ்சனா கேட்சாவ் என்ற இளம்பெண் தேள்களுடன் இரண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சிறிய வயதிலேயே தேள்களுடன் பயமில்லாமல் வசிக்கும் திறமை பெற்றிருந்தார் காஞ்சனா.   14ம் வயது முதல் அதனை சாதனையாக்க தொடங்கினார்.

தாய்லாந்தில் 2 கின்னஸ் சாதனை செய்தவர் என்று இவர் புகழ்பெற்றுள்ளார்.

தனது வாய்க்குள் 3.28நிமிடம் பெரிய தேளை வைத்திருந்து சாதனை படைத்துள்ளார்.

அடுத்ததாக, 50,000 தேள்களுடன் 12 மீட்டர் சதுர கண்ணாடி அறைக்குள் 33 நாட்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் அவ்வப்போது தேள்களுடன் நேரடியாக சாதனை நடத்திக்காட்டுகிறார்.

கடந்த சனிக்கிழமை தாய்லாந்தில் உள்ள பட்டயா வணிகவளாகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக தேள்களுடன் பொழுதுபோக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here