பள்ளியில் வறட்சி! ஓடை தண்ணீரை பருகும் குழந்தைகள்!!

0
1

மத்தியப்பிரதேசம்: ஸ்மார்ட் வகுப்பறைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நாட்டில் திறந்தவெளி வகுப்புகள் இன்னமும் இருக்கின்றன என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது மத்தியப்பிரதேச பத்திரிகை ஒன்று.

அம்மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டம் சவுராபுராவில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளிக்கட்டிடம் விழுந்து சேதமடைந்துள்ளதால் மாணவர்களுக்கு திறந்தவெளியில் வைத்து பாடம் சொல்லித்தரப்படுகிறது.

இந்நிலை குறித்து ஆசிரியர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அரசின் கவனத்துக்கு பலமுறை மனு அளித்தும் பயனில்லை.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அத்திட்டத்தில் சவுராபுரா தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் கிடைப்பது காய்ந்த ரொட்டிகளும், தொட்டுக்கொள்ள உப்பும்தான்.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமையாக இப்பள்ளி குழந்தைகளுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. பள்ளி வளாகத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நீர் வருவதில்லை.

இதனால் பள்ளியின் சற்றுதொலைவில் உள்ள ஓடை தண்ணீரைத்தான் தினமும் குடித்து வருகின்றனர்.

இதுகுறித்த செய்திவெளியானதும் அமைச்சர் அர்ச்சணா இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளியை வேறிடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here