கழிவறையில் இயங்கும் பள்ளிக்கூடம்! இது மத்தியப்பிரதேச மாநில சோகம்!!

0
2

மத்தியப்பிரதேசத்தில் கிராம தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பள்ளி கட்டிடம் இல்லாததால் கழிவறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மோகாம்புரா கிராமம் உள்ளது.

இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி போதிய வகுப்பறை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மட்டுமே உள்ளார்.

இவ்வளவு ஆண்டுகளாகப் பள்ளி வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, அதுவும் இல்லை.

அரசாங்கத்தால் கட்டப்பட்ட கழிவறை மட்டுமே உள்ளது.

சில நேரங்களில் இந்தக் கழிவறையில் ஆடுகளும் மழையில் இருந்து தங்களை காத்து கொள்ள தஞ்சமடையும்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் சந்திரா கூறுகையில்,

“பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் கழிவறையில் பாடம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் வகுப்பு வெட்ட வெளியிலோ, மரத்தடியிலோ வகுப்புகள் நடைபெறும்.

தற்போது, மழைக்காலம் என்பதால் அனைத்து இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், கழிவறையில் வகுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து பல ஆண்டுகளாக நான் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்திருக்கிறேன். ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் சாவ்லா இதற்கு மறுத்துள்ளார் ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here