தாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம்

0
0

தாமிரபரணி நதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று மா.கம்யூ.சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், வாசுகி, கனகராஜ் பங்கேற்றனர்.

கட்சியில் அரசியல் செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசியதாவது:
தாமிரபரணி ஆற்றின் அருகே நாம் போவதை அவர்கள் தடுக்க போலீசாரை அணிவரிசையாக நிற்க வைத்து இங்கே தடுத்து நிறுத்துகின்றனர்.
ஆனால், கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றனர்.

மக்கள் தாகத்துடன் இருப்பது குறித்தோ, விவசாயிகள் தண்ணீரின்றி தவிப்பது குறித்தோ ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை.

மேக் இன் இந்தியா என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்துவருகிறார் பிரதமர்.
ஆனால், இந்தியாவில், தமிழகத்தின் இயற்கை செல்வங்களை, மேக் இன் அமெரிக்கா நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறார்.

#SaveThamirabarani #AriseTN – Com. Brinda Karat, #CPIM

CPIM Tamilnaduさんの投稿 2017年4月24日(月)

நீதிமன்றமும் இதற்கு துணை போவது வருத்தம் அளிக்கிறது.
நதியே வற்றியுள்ளபோது மாயாஜாலம் செய்தா உபரிதண்ணீரை தொழில் நிறுவனங்களுக்கு தரமுடியும்?
நீதிமன்றங்களும், ஆளுவோரும் இதனை புரிந்துகொண்டு மக்கள் மன்றத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.


இந்தியாவை, தமிழகத்தை, நிலத்தை பாதுகாக்க எல்லோரும் ஒன்றிணைவோம்.
இதுதான் உண்மையான தேசபக்தி.
இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here