கார் ஓட்ட அனுமதி..! கார் பரிசு கேட்டு ஒப்பந்தம் போட்ட சவூதி மணப்பெண்..!

0
0

சமீபத்தில் சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கி அந்நாட்டில் புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரே தான் கட்டிக்கொள்ள உள்ள மாப்பிள்ளையிடம் கார் பரிசு கேட்டு அதற்கு ஒரு ஒப்பந்தமும்
போட்டுக்கொண்ட மணப்பெண்ணால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது படிப்பு மற்றும் வேலை செய்யவும் அனுமதி அளிக்க
வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுவாக எல்லோரும் கூறியுள்ள கருத்து, கல்யாணத்திற்கு முன்னதாகவே அந்தப் பெண் இப்படி ஒப்பந்தம் போட்டு பரிசு வாங்குகிறார். இன்னும் போகப்போக அந்த மாப்பிள்ளை அந்த பெண்ணுக்கு அடிமை ஆகி விடுவார். அந்த வாழ்க்கை சந்தோசமாக இருக்காது.

அரசு கார் ஓட்ட அனுமதி கொடுத்ததும் கார் பரிசு கேட்க தொடங்கிவிட்டனர். இனிமேல் ஆண்கள் கடனுக்கு கார் வாங்கியாவது  மனைவிக்கு தர வேண்டும் என்கிற நிலை வரும். இப்படியான ஒப்பந்தங்களை ஆண்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பலவித கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here