எஃகு கோட்டையில் விரிசல் விழக்கூடாது..! அதிமுகவினருக்கு சசிகலா உருக்கமான கடிதம்..!

0
2

சமீப காலமாக அ.தி.மு.கவில் அதிகார போட்டிகள் தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. இதனால் கட்சியேகலகலத்துப் போய் உள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்து சசிகலா அவரது தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில்  அவர்,

‘வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விழாதா என்று எதிரிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். எஃகு  கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர்.

இந்திய நாட்டின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் உள்ள கட்சியின் செல்வாக்கு சிறிதளவும் கீழிறங்கி விடக்கூடாது. முன்பை விட உறுதியாய்  கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம்.

ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு பாதுகாப்பை  உணர்வோமோ, அதே பாதுகாப்பு உணர்வை இனியும் உணரலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.கவில் பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி,தினகரன் அணி மற்றும் தீபா அணி என பிரிந்து கிடக்கிறது. கட்சியின் எதிர் காலம்  ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Related Topics : Tamilnadu News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here