இருக்கும் துன்பம் போதாதென்று குடும்ப துன்பம் வேறு..! சசிகலா கண்ணீர்..!

0
0

ஏற்கனவே சிறை தண்டனை பெற்று துன்பத்தை அனுபவித்து வரும் சசிகலா, அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மாறி மாறி குற்றம்சாட்டி மேலும் அவரை நிம்மதி இழக்க செய்து விட்டனர் என்று அ.தி.மு.க., அனுதாபிகள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, தினகரனுக்கும், திவாகரனுக்கும் ஏழாம் பொருத்தம். எங்களுக்குள் உரசல் இல்லை என்று சொல்லிக்கொண்டே நீறு பூத்த நெருப்பு போல அவர்களுக்குள் பகைமை வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

இந்நிலையில் கணவரை பார்ப்பதற்காக சசிகலா பரோலில் வந்ததும், அவர் பாதி நேரம் பஞ்சாயத்து செய்வதிலேயே போனதாம். திவாகரனுக்கு சாதகமான உறவினர்கள், ‘எல்லா பிரச்னைக்கும் காரணம் தினகரன் தான். அவரால் தான் கட்சியும் நம் கையை விட்டு போய் விட்டது.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நீங்கள் கூறியும் அவர் கேட்கவில்லை. அதனால் இரட்டை இலையும் பறிபோனது. எடப்பாடி பழனிசாமியை நீங்கள்தான் முதல்வர் ஆக்கினீர்கள். அவர் நன்றாகத்தான் இருந்தார். தினகரனின் ஆட்டத்தால் தான் அவரும் மாறினார்’ என்று குறை சொன்னார்கள்.

தினகரன் தரப்பு உறவினர்கள்,’இல்லை..இல்லை. எடப்பாடி கட்சியை கைப்பற்ற நினைத்ததால் தான் தினகரன் நமது வலிமையை காட்ட மதுரையில் தனியாக கூட்டம் நடத்தினார். அவர் இல்லை என்றால் நம் ஆதரவாளர்கள் எல்லாமே எடப்பாடி பக்கம் போய் இருப்பார்கள்.


இப்போதும் கட்சி நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இடையில் திவாகரன் தான் குழப்பம் ஏற்படுத்துகிறார்.’ என்று தினகரன் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இப்படி மாறி,மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதிலேயே உறவினர்கள் குறியாக இருந்துள்ளனர். முடிந்த அளவு சமாதானம் செய்வதில் குறியாக இருந்துள்ளார். ஆனால், யாரும் சமாதானம் ஆகவில்லை என்று கூறுகிறார்கள்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை சந்திக்க யாரும் வரவில்லை என்று வேறு அவருக்கு வேதனை. முற்றிலும் கட்சி நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிந்து அவர் துக்கத்தில் இருக்கிறார்.

அதில் சொந்தங்களுக்குள் அதிகார போட்டி வேறு. அவர் என்ன தான் செய்வார்? கட்சியை அவர் பொறுப்பில் எடுத்தால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று நினைத்தார்.  ஆனால், இன்று அதனாலேயே அவர் நிம்மதி இழந்து தவிக்கிறார் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான விசுவாசிகள்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here