‘சொந்த ஊரிலேயே ஒண்ணையும் காணோம்..!’ மன்னார்குடி குடும்பம் கலக்கம்..!

0
0

சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி மற்றும் பன்னீர் தலைமையிலான பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் புரட்சி வெடிக்கும் என்று சசிகலா மற்றும் தினகரன் எதிர்பார்த்தார்கள். ஆனால், பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டம், உருவ பொம்மை எரிப்பு என்று நடந்ததே தவிர உணர்ச்சிப்பூர்வமான போராட்டமாக வெடிக்கவில்லை.

இதில் தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவ்வளவு ஏன்? தஞ்சாவூர் மன்னார்குடி வகையறாவின் பூர்வீகம். அவர்கள் மாவட்டத்தில் கூட சொல்லிக்கொள்ளும் அளவில் பெரும் போராட்டம் ஒன்றும் நடக்கவில்லை.

தினகரன் ஆதரவாளர்கள் ,எடப்பாடி பழனிசாமி,பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மைகளை எரித்தார்கள். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இப்படி மாவட்டம் முழுவதுமே வெறும் 120பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொந்த மாவட்டத்திலேயே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆதரவு இல்லை. பின்னர் எப்படி தமிழகம் முழுவதும் நமக்கு ஆதரவு இருக்கும்? என்று சசிகலா, தினகரன் உட்பட மன்னார்குடி சொந்தங்கள் கலக்கத்தில் உள்ளனராம்.

ஆட்சி போனாலும் கூட கட்சியை முழுமையாக அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சேர்ந்து கவர்னர் சந்திப்பு, ஆதரவு வாபஸ்,பெரும்பான்மை நிரூபிக்கணும் என்று அரசுக்கு தொடர் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

அடுத்த கட்டமாக ஜனாதிபதி சந்திப்பு உள்ளது. அதிலும் தீர்வு இல்லை என்றால் கோர்ட்படி ஏறுவது என்று தீர்மானித்துள்ளனர்.

ஆனால், சொந்த மாவட்டத்திலேயே ஆதரவு இப்படி இருக்கும்போது, கட்சி நம் கைக்கு வருமா என்ற சந்தேகத் தவிப்புடன் மன்னார்குடி சொந்தங்கள் உள்ளதாக அ.தி.மு.க.,வட்டாரம் கூறுகிறது.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here