சாம்சங் டேப் எஸ்3 எப்படி இருக்கு? – விடியோ

0
0

இரண்டு ஆண்டுகளுக்கு பின் புதிய டேப்லட்டை களம் இறக்கியுள்ளது சாம்சங்.
சாம்சங்க் டேப் எஸ்3 இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
2017, மொபைல் உலக மாநாட்டில் இந்த டேப் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகமாகும் என்ற தனது வாக்கை சாம்சங்க் காப்பாற்றியுள்ளது.

ஆப்பிளின் ஐபேட் ப்ரோ 9.7 இஞ்ச்க்கு போட்டியாக டேப் எஸ்3 உள்ளது.
பின் பக்கத்தில் மெட்டல் கவருக்கு பதிலாக கண்ணாடி கவரில் பளபளக்கிறது.
இத்துடன் எஸ்.பேனா ஒன்றையும் சாம்சங் தருகிறது.

 

இந்த டேப்பையும், பேனாவையும் ஒருசேர பார்ப்பவர்களுக்கு பேப்பர் பேனா உணர்வு கிடைக்கிறது.
டேப் எஸ்3-ல் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன.
செல்பிக்கு வசதியாக முன்பக்க கேமரா 5 பிக்சலும், பின்பக்க கேமரா 13பிக்சலும் கொண்டுள்ளது.
4ஜிபி மெமரி கொண்ட 920க்வாட்கோர் சிப்செட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் இதன் மெமரியை 256ஜிபி வரை விரிவாக்கும் வசதி உள்ளது.
மணிக்கு 6ஆயிரம் மில்லியன் ஆம்ப் திறனுடைய இந்த பேட்டரி 12மணிநேரம் நீடித்திருக்கும்.
ஆண்ட்ராய்ட் நகட் ஆபரேட்டிங் சிஸ்டம், டச்விஸ் யூசர் இண்டர்பேசில் இயங்குகிறது சாம்சங் டேப் எஸ்.3
இதன் விலை ரூ.49,990.

சாம்சங் டேப் எஸ்3 எப்படியிருக்கு என்று விடியோவை பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here