காஜல் அகர்வாலாக மாறிய பாட்டி…!

சேலத்தில் சரோஜா என்ற மூதாட்டிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் குடும்ப அட்டையில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தமிழக அரசு பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கொடுத்து வருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் நவீன குடும்ப அட்டைகளில் பல்வேறு பிழைகளும்,குளறுபடிகளும் இருப்பதாக பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் சரோஜா என்ற மூதாட்டிக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டது.

அந்த ஸ்மார்ட் கார்டை வாங்கிய மூதாட்டி அதில் உள்ள படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது ஸ்மார்ட் கார்டில் அவரது படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மூதாட்டி கேட்டபோது அச்சிடும்போது தவறு நடந்திருக்கலாம். அதை மாற்றிகொள்ளலாம் என்று சாதாரணமாக கூறினார்.

மேலும், அவர் கூறுகையில, ‘இந்த புகைப்படத்தை இ-சேவை மையத்தில் கொடுத்து மாற்றி கொள்லும்கள்’ என்று கூறி உள்ளார்.

ஆனாலும், ‘இதற்காக பல வேலைகளையும் விட்டு விட்டு மீண்டும் நான் அலைய வேண்டும்’ என்று புலம்பிவிட்டு சென்றார்,அந்த மூதாட்டி.

About the author

Related

JOIN THE DISCUSSION