சிறுமி பாலியல் வன்கொடுமை…! பள்ளி மாணவர்கள் கைது…!

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 15 வயது சிறுமி மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார்.

அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 1௦-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
பெற்றோர் சிறுமியை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த 4 மாணவர்கள் சிறுமியை அங்கு உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று சிறுமியை காப்பாற்றினர். பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு பின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் கோனேரிவளவு பகுதியை சேர்ந்த குமார், தாமரைச்செல்வன்,வேடிச்சி மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவர்களை கடுமையாக தண்டிக்கக் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION