‘காவி’ நிறமாகும் உத்தரபிரதேசம்..!

0
0

உத்தரபிரதேச மாநிலம அரசு எல்லா நிலைகளிலும் காவி நிறத்தை மெல்ல மெல்ல புகுத்தி வருகிறது.


நேற்று லக்னோவில் நடந்த விழாவில், காவி நிற அரசு பஸ்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு நடந்து வருகிறது. எப்போதும் காவி உடை அணியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இருக்கையில் காவி நிறத்திலான துண்டுகள்தான் வைக்கப்படுவது வழக்கம்.

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட புத்தகப் பைகள், காவி நிறத்தில் வழங்கப்பட்டன.

அரசு விள்ளக்களில் அமைக்கப்படும் மேடைகள் காவி நிறத்தில் அமைக்கப்பட்டன. விழாவுக்கான அழைப்பிதழ்கள் காவியாகின.அரசின், முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய டைரிகள் காவி நிறத்தில் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மாநில போக்குவரத்துக்கழகம் சார்பில் கிராம பகுதிகளுக்கு 50 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யும் விழா, லக்னோவில் நேற்று நடந்தது.

அந்த விழாவில் மேடை மட்டுமல்ல, பஸ்களும் காவி நிறத்தில் இருந்தன. பஸ்கலுக்கு போடப்பட்டிருந்த மாலைகளும் காவி நிறத்தில் இருந்தன.

அந்த மாநில மக்களுக்கு புதிதல்ல. மாயாவதியின், பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, எல்லாம் நீல நிறத்தில் இருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியின் போது சிவப்பு,பச்சை நிறங்களில் இருந்தன.தற்போது, எல்லாம் காவி நிறத்துக்கு மாறி வருகின்றன.

இது குறித்து, மாநில அமைச்சர், ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:-

‘எங்களுக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும். காவி நிறம் தியாகத்தையும் வீரத்தையும் குறிக்கிறது. நம் தேசியக் கொடியிலும் காவி நிறம் உள்ளது. காவி நிறத்தை பயன்படுத்த எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது திட்டமிட்டதல்ல’ என்று கூறினார்.

Related Topics : National News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here