கார்ட்டூன் கேரக்டரை போன்று செயற்கை சதை! வாலிபருக்கு டாக்டர்கள் எச்சரிக்கை!!

0
0

பெர்லின்:கார்ட்டூன் கேரக்டரைப்போன்று கைகளில் சதையை செயற்கையாக ஏற்படுத்தியுள்ளார் ஒருவர். அவரை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள ப்யதிகோர்ஸ்க் நகரை சேர்ந்தவர் கிரில்டெரிசின்(21).
இவர் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர் சிறுவயதில் இருந்தே காமிக்ஸ் புத்தகங்களை விரும்பி வாசிப்பது வழக்கம்.
தற்போது கார்ட்டூன் கேரக்டரான போப்பியைப்போன்று தனது புஜத்தில் சதை இருக்கவேண்டுமென்று விரும்பினார்.
கடந்த சில மாதங்களாக இதற்காக கடும் முயற்சிகள் மேற்கொண்டார்.
தற்போது பாப்பியின் கைகளைப்போன்று இவர் புஜமும் பலமானதாக தோன்றுகிறது.

இதற்காக கிரில்டெரிசின் உடற்பயிற்சி செய்தாலும் ஊசிமூலம் சிந்தால் என்ற எண்ணையை கைகளில் செலுத்தியுள்ளார்.
தாவர எண்ணெய், மயக்கமருந்து, ஆல்கஹால் கலந்த கலவையே சிந்தால் ஆகும்.
பாடிபில்டிங்கில் ஈடுபடுவோர் தங்கள் உடலமைப்பை பலமாக காட்ட சிந்தால் எண்ணெயை உடலில்செலுத்துவது வழக்கம்.
இது ஆபத்தான செயல் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் சதையில் இதுபோன்று செலுத்தப்படும் எண்ணெய்கள் வாதம், தசைஅழுகல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பாப்பி சதையை கொண்டுவருவதற்குள் இறந்துவிடுவேனோ என்ற பயம் தனக்கு ஏற்பட்டதாக க்ரில்டெரிசின் தெரிவித்துள்ளார்.
கடும் காய்ச்சல், மயக்கம் தனக்கு ஏற்பட்டதாகவும், தற்போது சகஜமாகிவிட்டேன். கைகளில் நான் விரும்பிய அழகு கிடைத்துவிட்டது என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here