போலீசுக்கு அவார்டு வாங்கித்தந்த ஆவேசப்பெண்! விடியோ!!

மலேசியாவில் தாக்கவந்த பெண்ணை அமைதிப்படுத்தி அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதை பொறுமையாக எடுத்துக்கூறினார் ஒரு போலீஸ்காரர்.
அவருக்கு அரசு தரப்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.


சுபாங்ஜெயா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார் ஒரு அதிகாரி.
அங்கு பார்க்கிங் அல்லாத பகுதியில் நின்றிருந்த காரை பூட்டினார் நோர்சாபான்(32).
சிறிதுநேரத்தில் காரின் உரிமையாளரான சீனப்பெண் அங்குவந்தார்.
அவர் என் காரை ஏன் பூட்டினீர்கள் என்றவாரு ஸ்டியரிங்கை பூட்டும் இரும்புராடுடன் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


அவருக்கு போக்குவரத்து விதிமீறலை சுட்டிக்காட்டினார் போலீஸ் அதிகாரி.
இங்கு இத்தனை வாகனங்கள் இருக்கையில் என் கார் மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்ததா என அப்பெண் ஆவேசத்துடன் கேட்டார்.
அவருக்கு பொறுமையாக பதில் அளித்தார் நோர்சாபான்.

Vehicle claimed b.cou parked car at no parking place. Chinese gilr not happy fighting with majlis officer

โพสต์โดย PublicNews บน 7 กันยายน 2017

இதுதொடர்பான விடியோ மலேசியாவில் வைரலாக பரவியது.
சுபாங்ஜெயா மேயர் போலீஸ் அதிகாரி நோர்சாபானை அழைத்து பாராட்டினார்.
அவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION