ரூ.500கோடிக்கு சொத்து சேர்த்த அதிகாரி கைது

0
0

ரூ.100கோடி மதிப்பு நகை, ரூ.300கோடி மதிப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.100கோடி மதிப்பு நிலம் மற்றும் ரொக்கப்பணம் சம்பாதித்த அதிகாரி கடைசியில் கைதானார்.                                                                                                                                          ஆந்திரப்பிரதேச மாநிலத்தில்  இச்சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத் நகர விரிவாக்க கழகத்தின் இயக்குநர் வெங்கட ரகு.
இம்மாதம் இறுதியில் ஓய்வுபெற உள்ளார்.
இதனை முன்னிட்டு சிங்கப்பூரில் பிரிவு உபசாரவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதில் பங்கேற்க ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள நூற்றுக்கணக்கானோர் விமான டிக்கெட் வாங்கினர்.
இதுகுறித்து க்ரைம் போலீசாருக்கு தெரியவந்தது.


வெங்கடரகு, அவரது உறவினர்கள் வீடு என்று 15 இடங்களில் ஒரேநேரத்தில் சோதனை நடைபெற்றது.

அவர் வீட்டில் கிடைத்த நகைகள், பணம், பத்திரங்களை பார்த்து அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறைதான்.

வெங்கடராஜூவின் மனைவி காயத்ரி. இவர் நகரமேம்பாட்டுக்கழகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அவர் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் வெங்கடரகு.

இத்தம்பதிக்கு விஜயவாடா,ஞானவாரம், மங்களகிரி, ஷிர்டி என்று பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

அமைச்சர், உயரதிகாரியின் பெயரில் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணத்தை ரகு சுருட்டிவந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.
அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here