ரோஹிங்கியா முஸ்லீம் விவகாரம்..! ஐ.நா.,பொது செயலர் கடும் கண்டனம்!!

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் வன்முறைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆனாலும், மியான்மர் அதை கண்டுகொள்ளாமல் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா., தலைமையகத்தில் மியான்மர் விவகாரம் குறித்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்,

‘மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளுக்கு, உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை மியான்மர் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

இல்லை என்றால் ஐ.நா., இந்த விசயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.’ என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தும், மியான்மர் அரசு செவிசாய்க்க மறுத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளரே இந்த விவகாரம் பற்றி நேரடியாக கண்டித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுவரை, 2லட்சத்து 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION