போலீசார் முகத்தில் மிளகாய்த்தூள் டீ! சிறையில் இருந்து கைதிகள் தப்பினர்!

0
2

பஞ்சாப்: சிறை அதிகாரிகள் முகத்தில் மிளகாய்த்தூள் டீ ஊற்றி மூன்று பேர் சிறையில் இருந்து தப்பியுள்ளனர். பரபரப்பான இச்சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹ்வாரா சிறையில்.

அச்சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு    திருட்டு வழக்கில் கைதான மூன்று வாலிபர்கள் அடைக்கப்பட்டனர்.

அவர்களுடன் சேர்த்து சிறையில் 13பேர் இருந்தனர்.  காலையில் சிறைக்காவலர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக சிறைக்கதவு திறக்கப்பட்டது.

கைதிகள் இருவர் டீ தயாரிப்பதற்காக கிச்சனுக்கு சென்றனர். அங்கிருந்த மிளகாய்த்தூளை பார்த்ததும் அதை டீயில் கரைத்து ஊற்றினர்.  அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்த காவலர்கள் முகத்தில் ஊற்றிவிட்டு தப்பிச்சென்றனர்.

கைதான கொள்ளையர்களில் இருவர் தப்பிச்சென்றுவிட ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார்.  தப்பிய இருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here