‘ஓய்வில்லா வேலை..!’ மீண்டும் ரிசர்வ்படை வீரர் குற்றச்சாட்டு விடியோ..!

ஓய்விலாமல் வேலை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாக உயரதிகாரிகள் மீது மீண்டும் புகார் கூறி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட் கேம்பில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில் அவரது உயரதிகாரிகள் மீது புகார் கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து, அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே வீரர் பங்கஜ் மிஸ்ரா மீண்டும் பேஸ்புக்கில் ஒரு ‘விடியோ’ பதிவிட்டுள்ளார். அதில், ‘ஓய்வில்லாமல் வேலை செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

உணவும் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. வீரர்களுக்கு எதிரான அந்த
நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் துவங்கி உள்ளேன்’ என்று அந்த விடியோவில் கூறியுள்ளார். அது குறித்து விசாரணை நடந்து வருவதாக, மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Topics : National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION