‘நதிகளை மீட்போம்;பாரதம் காப்போம்’ ஏமாற்றுத் திட்டம்..! மணியரசன் எச்சரிக்கை…!

‘நதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்ற திட்டம் ஜக்கி வாசுதேவின் ஒரு ஏமாற்று வேலை என்று பெ.மணியரசன் கூறி உள்ளார்.

‘நதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்ற தலைப்பில் கோவை ஈசா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் தலைமையில் நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.

இது குறித்து காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பபாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

‘ காவிரி உரிமையை மீட்க நாம் போராடி வருகிறோம். அதை திசை திருப்பும் வேலையைத்தான் ஜாக்கி வாசுதேவ் செய்து வருகிறார்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கோரி சத்குரு தனது மாநிலமான கர்நாடகாவுக்கு இது வரையிலும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

கங்கை மற்றும் யமுனையை காப்பதற்குத் தான் இவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் எண், பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கைக்கு கொடுக்கப்பட்ட அதே எண் தான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலும்,’காவிரியை மற’, ‘கங்கையை நினை’ என்பதின் மற்றொரு வடிவம்தான் சத்குருவின் நதிகளை மீட்போம்’ பாரதம் காப்போம்’ என்ற விழிப்புணர்வு பயணம்.

நதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்பது பா.ஜ.,வின் சூழ்ச்சித் திட்டம். காவிரியை மறக்கடிக்கும் திட்டம். மத்திய அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஜக்கி வாசுதேவ் மூலமாக தமிழ்நாட்டுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியை செய்து வருகிறது. அந்த சூழ்ச்சியில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.’ என்று அவர் கூறினார்.

About the author

Related

JOIN THE DISCUSSION