ராஜீவ்காந்தி கொலை, வெடிகுண்டு விபரம்..! அறிக்கை அளித்தது சி.பி.ஐ…!

0
0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு விபரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

1991-ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

இவர்களது விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விவரங்கள்
தெளிவுபடுத்தப்படவில்லை.

 

இதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விதம், வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ராஜீவ்காந்தியைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த தகவலை சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ தாக்கல் செய்தது.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here