மவுனம் கலைகிறார் ரஜினிகாந்த்!

0
2

சென்னை:காலா படத்தில் பிசியாக இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் இந்த ஆண்டு 67வது பிறந்தநாளை ஆரவாரமில்லாமல் கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை முழுவதும் ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்புவிடுவிக்கும் வகையில் அந்த போஸ்டர்கள் இருந்தன.


டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. சினிமா மட்டுமின்றி விளையாட்டு, அரசியல் பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.
பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


மேலும், தனக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன ரசிகர்களுக்கு பொதுவாக ஒரு நன்றியை தெரிவித்துள்ளார்.
ரஜினியிடம் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்தாண்டு இப்படியொரு மாற்றம் தெரிகிறது என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.


ஆர்.கே.நகர் தொகுதியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ரஜினிகாந்தை விட விஜய், விஷால், கமல் ஆகியோர் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர்.


இந்த விபரத்தை தெரிந்துகொண்ட ரஜினிகாந்த் தனது மவுனத்தை கலைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்துள்ளார். எனவே இந்த அதிரடிமாற்றம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here