செல்பி புகைப்படம் எடுக்க ரயில்வேத்துறை தடை!

0
2

ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

வடக்கு ரயில்வே நிர்வாகம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்போன்களில் புகைப்படம் எடுத்து  அந்த செல்பி-களை  சமூக ஊடகங்களில் வெளியிடும் போக்கு இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.

ஆபத்தான பல இடங்களிலும் அவர்கள் செல்பி படங்கள் எடுத்துஅதனை ஒரு சாதனையாக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரயில்கள் ஓடும்போதும், ரயில் இன்ஜின்கள் மீது ஏறிநின்றும், ரயில் இன்ஜின்கள் முன்னே நின்றும் அவர்கள் படம் எடுத்து வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கு தடைவிதிக்கும் வகையில் வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுத்தால் ஆறு மாத சிறை  தண்டனை மற்றும் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் இதுதொடர்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here