பிரதமர் மோடியின் வெற்று கோஷங்கள்! ராகுல் கடும் தாக்கு!!

0
0

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி வெற்று கோஷங்கள் எழுப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பாஜக தொண்டர்களுக்காக ஒரு பதிவு இட்டுள்ளார்.
அன்பான மோடியின் ஆதரவாளர்களே என்று அவர் தனது டுவிட் செய்தியை தொடங்கியுள்ளார்.


ஸ்மார்ட் நகரம் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 9ஆயிரத்து860கோடியில் இதுவரை 7% பணம் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
உங்கள் தலைவர் வெற்றுகோஷங்கள் எழுப்பிவரும் வேளையில், சீனா நம்மைவிடவும் முன்னேறி எங்கோ சென்றுவிட்டது.


இதோ இத்துடன் இணைத்துள்ள விடியோவை பாருங்கள். உங்கள் தலைவரை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த வலியுறுத்துங்கள்.


இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்து விடியோவையும் இணைத்துள்ளார்.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் நேரத்திலும் இதுபோன்று பாஜக அரசை விமர்சித்து பலகேள்விகளை எழுப்பியிருந்தார் ராகுல்காந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here