கத்தார் இளைஞரின் கருணை உள்ளம்!! விடியோ!!

0
0

வீட்டில் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்களை துன்புறுத்தும் பல கதைகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

பணிப்பெண்ணை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு உருகும் கத்தார் இளைஞரின் விடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கத்தாரை சேர்ந்தவர் அல்நமா(20).  இந்த இளைஞர் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தங்கள் வீட்டில் 20வருடமாக வேலைபார்த்து வந்த  ஜூபைதா என்ற பெண்மணி குறித்து உயர்வாக குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சுபைதா எங்கள் வீட்டுக்கு பணியாளராக 20ஆண்டுகளுக்கு முன்வந்தார்.

எங்கள் வீட்டில் ஒருவராக எங்கள் அண்ணியாக அவர் எங்களிடம் அன்புகாட்டினார். எங்கள் வீட்டின் ஏழாவது உறுப்பினர் அவர்.

எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகிடைத்தால் முதன்முதலாக பிலிப்பைன்சில் எங்கள் அண்ணியை பார்க்கத்தான் செல்வேன்.

அவரில்லாமல் என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு எப்படி வாழ்வேன் என்பதை நினைக்க கஷ்டமாகவே உள்ளது.

பிலிப்பைன்சில் உள்ள மக்கள் கத்தார் குடும்பங்களை மிகவும் அன்புடன் நேசிக்கின்றனர். இதற்கு எங்கள் ஜூபைதா அண்ணி ஒரு சாட்சி ஆவார்.

கத்தார் நாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ள இச்சூழ்நிலையில் பிலிப்பைன்ஸ் மக்களின் அரவணைப்பு எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அல்நமா தனது விடியோவில் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சின் தேசிய மொழியான டகலாக்கில் அவர் பேசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இந்த விடியோவுக்கு டுவிட்டரில் ஆதரவு கருத்துக்கள் பெருகி வருகின்றன.

பிலிப்பைன்ஸ் மக்கள் கத்தாரை புகுந்தவீடாக கருதிவருகின்றனர் என்று அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here