கத்தார் டிவி உரிமையாளர் கைது?!

0
0

கத்தாரின் விளையாட்டு  மற்றும் பொழுதுபோக்கு சேனல் பி இன்.

இதன் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாகி நசிர் அல்-கலாபி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்படலாம்   என்று தகவல்கள் பரவிவருகின்றன.

சுவிட்சர்லாந்து போலீசார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக இவரிடம் விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.

பி இன் சேனல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை மத்திய கிழக்கு, ஆப்ரிக்க நாடுகளில் ஒளிபரப்ப முழு உரிமம் பெற்றுள்ளது.

இதில் மோசடி நடந்துள்ளதாக ஏற்பட்டுள்ள புகாரை தொடர்ந்து நசிர் கைதாகி உள்ளார்.

நசிருக்கு சொந்தமான பிரான்ஸ், கிரிஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் இப்புகார் சம்பந்தமாக போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

தற்போது அவரிடம் விசாரணை நடத்த அழைத்துச்சென்றனர்.

2022ல்  உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடக்க உள்ளன.

இதற்காக 12 மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கத்தார் நாட்டை வளைகுடா நாடுகள் விலக்கி வைத்துள்ள நிலையில் இப்போட்டி கத்தாரில் நடைபெற்றால் அவற்றுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக நினைக்கின்றன.

எனவே, பிபா போட்டியை கத்தார் நடத்தக்கூடாது என்பதில் அவை மும்முரமாக உள்ளன.

இதற்கான மறைமுக நெருக்கடியை அவை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பி இன் நிறுவனத்தின் விடியோ ஒளிபரப்புகளை சவுதியில் அனுமதியின்றி சில டிவிக்கள் ஒளிபரப்பு செய்தன. அதற்காக அந்நிறுவனங்கள் மீது பி இன் சவுதி அரசரிடமும், நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here