அந்நிய முதலீட்டு உச்சவரம்பு நீக்கம்! கத்தார் அரசு அதிரடி நடவடிக்கை!!

0
1

தோகா: கத்தார் நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக 100சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் வெளிநாட்டு நிறுவனங்கள் 49%முதலீடு செய்யலாம் என்ற விதிமுறை அமலில் இருந்தது.


வளைகுடா கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து தொழில், விவசாயம் ஆகியவற்றில் தீவிரகவனம் செலுத்தி வருகிறது அரசு.
நடப்பு ஆண்டில் விவசாய உற்பத்தி 30% அதிகரிக்கும் என்று தெரியவந்தது. இதனை வரும் ஆண்டுகளில் 50%ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விவசாயத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
அதேபோன்று வளர்ச்சி, வேலைவாய்ப்பு விஷயங்களை கருத்தில்கொண்டு வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்சவரம்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.


இருப்பினும், ரியல் எஸ்டேட், வங்கி, காப்பீட்டுத்துறைகள் அரசின் சிறப்பு அனுமதியை பெற்றபின்னர்தான் கத்தாரில் 100% முதலீட்டை கொண்டுவரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here