கத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு திடீர் விசிட்!

கத்தார் அரசர் தமீம் பின் ஹமத் அல்தனி  அமெரிக்க படைத்தளத்துக்கு திடீரென விஜயம் செய்தார்.

கத்தாரில் உள்ள அல் உதைத் என்னுமிடத்தில் அமெரிக்க விமானப்படைத்தளம் உள்ளது.

மத்திய ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இங்கு படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இத்தளம் அமைக்க அல்தனி பெரும் ஒத்துழைப்பு கொடுத்து அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தார்.

வளைகுடா நாடுகள் கத்தாருடனான உறவை தற்போது முறித்துள்ளன.

இப்பிரச்சனையில் குவைத், அமெரிக்கா தலையிட்டு தீர்வுகாண முயற்சித்து வருகின்றன.

இப்பிரச்சனை தொடங்கி 100நாட்களாகியும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கத்தார் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இச்சூழலில் கத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு சென்றுவந்துள்ளார்.

அங்குள்ள ராணுவ கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார்.  அமெரிக்க படை கமாண்டர் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெப்ரியையும் சந்தித்து பேசினார்.

கத்தார் அரசருடன் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடன்சென்றனர்.

செப்டம்பர் 11 நினைவுதினத்தை முன்னிட்டு அரசர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

 

About the author

Related

JOIN THE DISCUSSION