கத்தாரின் பக்கம் வீசும் காற்று!

0
0

வளைகுடா நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 2 நிபந்தனைகள் விதித்துள்ளது கத்தார்.

கத்தார் அரசுடன் வளைகுடா நாடுகள் ராஜிய உறவை துண்டித்துக்கொண்டன.

மீண்டும் உறவை புதுப்பிக்க 13 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தின.

இதனை கத்தார் ஏற்க மறுத்தது.

இதனை தொடர்ந்து நிபந்தனைகள் ஆறாக குறைக்கப்பட்டன.

கத்தார் அரசு அவற்றையும் ஏற்க மறுத்து விட்டது.

கத்தார் தடை தொடர்பாக முதன்முறையாக அந்நாட்டு அரசர் ஷேக் தமீம் பேசி உள்ளார்.

 

வளைகுடா நாடுகளுக்கு 2 நிபந்தனைகள் அவர் விதித்துள்ளார்.

## தற்போதைய சிக்கல் தொடர்பாக எவ்வித முன் நிபந்தனைகளும் ஏற்க மாட்டோம்.  அப்படி எதையும் பிறநாடுகள் வலியுறுத்தக் கூடாது.

## வளைகுடா நாடுகள் அனைத்தின் சார்பிலும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

கத்தார் அரசரின் இந்த யோசனையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

Minister of State for Foreign Affairs for the United Arab Emirates, Anwar Gargash, speaks at an event at Chatham House in London, Britain July 17, 2017. REUTERS/Neil Hall

சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்வர் கர்காஷ் இதுகுறித்து கூறுகையில்,

கத்தார் அரசர் தற்போது பேச முன்வந்துள்ளது மாற்றத்துக்கான அறிகுறி.

ஆனால், அந்நாடு தீவிரவாதிகளிடம் வைத்துள்ள தொடர்பையும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கான முழு அர்த்தம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here